முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர் பொன்முடி, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Tamil Nadu cabinet reshuffle
இதே நேரம் அமைச்சரவையில் செய்யப்படும் துறை மாற்றங்கள் பற்றிய தகவல்களும் இன்று (ஏப்ரல் 27) மாலை வந்துள்ளன.

அதன்படி பொன்முடி வகித்து வந்த வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் அளிக்கப்படுகிறது என்றும்… செந்தில் பாலாஜி வகித்த மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமியிடமும், மின்சாரத்துறையானது அமைச்சர் சிவசங்கரிடமும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்றும் தகவல்கள் வருகின்றன.
அமைச்சரவையில் மேலும் ஒரு மாற்றமாக ஏற்கனவே பால்வளத்துறை அமைச்சராக இருந்து நீக்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு மீண்டும் அதே பால்வளத்துறை அளிக்கப்படலாம் என்றும் கோட்டை வட்டார தகவல்கள் கூறுகின்றன.