தற்போது நடிகர் சிலம்பரசனின் 48வது படத்தை பிரபல இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இவர் துல்கர் சல்மானின் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற வெற்றி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பீரியட் படமாக உருவாகி வரும் STR 48 படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார்.
இந்நிலையில், நாளை (பிப்ரவரி 3) நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR 48 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
இதனை தனது பக்கத்தில் வெளியிட்டு நடிகர் சிம்புவிற்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
அன்புத் தம்பி @SilambarasanTR_ அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.#STR48 #BLOODandBATTLE@desingh_dp #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/SnqR4dU84x
— Kamal Haasan (@ikamalhaasan) February 2, 2024
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்பு நீண்ட முடியுடன் இரண்டு வித்தியாசமான கெட்டப்பில் நேருக்கு நேர் மோதி கொள்வது போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதன்மூலம் படத்தில் நடிகர் சிம்பு இரு வேடங்களில் நடிக்கிறார் என்பதும் உறுதியாக இருக்கிறது.
மன்மதன் படத்திற்குப் பிறகு 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்ற சம்பாய் சோரனுக்கு 3 நாள் கெடு!
மணல் குவாரிகளில் ரெய்டு : ரூ.130 கோடி சொத்துகளை முடக்கிய ED!