மணல் குவாரிகளில் ரெய்டு : ரூ.130 கோடி சொத்துகளை முடக்கிய ED!

Published On:

| By Kavi

130 Crore worth of assets frozen by ed

தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

2023 செப்டம்பர் 12ஆம் தேதி, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல், வேலூர் என பல்வேறு இடங்களில் மணல் குவாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

புதுக்கோட்டையில் மணல் குவாரி தொழிலதிபரான எஸ் ஆர் எனப்படும் ராமச்சந்திரன் கார்ப்பரேட் அலுவலகம், திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம், சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் உள்ளிட்டோருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜ்குமார், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட சம்மனை மறு உத்தரவு வரும் வரை செயல்படுத்த தடை விதித்து கடந்த ஜனவரி 5ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 2) அமலாக்கத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சட்டவிரோதமான மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 128.34 கோடி ரூபாய் மதிப்பிலான 209 இயந்திரங்கள் உட்பட மொத்தம் ரூ.130 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

சண்முகம் ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர்செல்வம் கரிகாலன் ஆகியோரின் 35 வங்கிக் கணக்குகளில் இருந்து 2.25 கோடி ரூபாய் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

’விஜய் கட்சி பெயரில் ’திராவிடம்’ இல்லாததே மகிழ்ச்சி தான்’ : சீமான்

பவதாரிணி இசையமைத்த கடைசி திரைப்படம் : இயக்குநர் உருக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share