ADVERTISEMENT

ராஜினாமா செய்ய மறுத்தால்… பொன்முடிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

Published On:

| By Aara

அமைச்சர் பொன்முடி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தாமதித்து வருவதால், முதல்வர் ஸ்டாலின் அவருக்கு கடுமையான எச்சரிக்கை விட்டிருப்பதாக  கோட்டை வட்டாரங்களில் பரபரப்பு கொழுந்துவிட்டு எரிகிறது. stalin warns Ponmudi if he refuses to resign

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு நேற்று முன் தினம் (ஏப்ரல் 24) மாலை அறிவுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

ADVERTISEMENT

இது தொடர்பாக மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் ஸ்டாலின் அதிரடி… அதிர்ச்சியில் பொன்முடி என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி அன்பகத்தில் நடந்த  தபெதிக நிகழ்வில் சைவ, வைணவ சமயங்களை பற்றியும் பெண்களைப் பற்றியும் ஆபாசமாகப் பேசியிருந்தார் பொன்முடி. இந்தப் பேச்சின் வீடியோ வெளியான நிலையில், ஏப்ரல் 11-ஆம் தேதி, அவரது துணைப் பொதுச் செயலாளர் பதவியை உடனடியாக பறித்தார் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின்.

ADVERTISEMENT

அது தொடர்பாக பொன்முடி மீது கடும் கோபத்தில் இருந்தார் முதல்வர் ஸ்டாலின். அவரை சந்திப்பதை தொடர்ந்து தவிர்த்து வந்தார். stalin warns Ponmudi if he refuses to resign

இந்நிலையில்தான் ஏப்ரல் 24 மாலை முரசொலி செல்வம் சிலை திறப்பு நிகழ்வு முடிந்த பிறகு,  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு பொன்முடிக்கு செய்தி அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின்.

ADVERTISEMENT

ஆனபோதும் பொன்முடி ராஜினாமா கடிதம் கொடுக்க இழுத்தடித்து வருகிறார்.  ’கட்சிப் பதவியும் இல்லை…  அமைச்சர் பதவியும் இல்லாவிட்டால்  எனது சீனியாரிட்டிக்கு என்ன மரியாதை?’ என்று கேட்ட  பொன்முடி, ‘எனக்கு  சட்டமன்ற அரசு கொறடா பதவியாவது வேண்டும்’ என்றும் கேட்டிருக்கிறார். ஆனால், அவரது கோரிக்கை முதல்வரால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், தனது மனைவி மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் தன் பதவியை ராஜினாமா செய்ய ஒரு மாத அவகாசம் வேண்டும் என்று  அடுத்த வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஆனால், இந்த வேண்டுகோளையும் முதல்வர் நிராகரித்துவிட்டார்.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால் பொன்முடி டிஸ்மிஸ் செய்யப்படுவார் என்று அவருக்கு முதல்வர் எச்சரிக்கைத் தகவல் அனுப்பியிருக்கிறார் என்கிறார்கள் இன்று கோட்டை வட்டாரங்களில். stalin warns Ponmudi if he refuses to resign

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share