டெல்லியில் சோனியா காந்தி, ராகுலை சந்தித்த ஸ்டாலின்

Published On:

| By Selvam

stalin meets sonia gandhi and rahul gandhi in delhi

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை இன்று (மே 23) சந்தித்தார்.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நாளை (மே 24) நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி சென்றார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, திருச்சி சிவா மற்றும் திமுக எம்.பி-க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். stalin meets sonia gandhi and rahul gandhi in delhi

விமான நிலையத்தில் இருந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். இந்தநிலையில், இன்று மாலை ஜன்பத் சாலையில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இல்லத்திற்கு ஸ்டாலின் சென்றார். அங்கு சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பானது அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. stalin meets sonia gandhi and rahul gandhi in delhi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share