உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மூத்த அமைச்சர் துரைமுருகனை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு வயது 87. வயது மூப்பு காரணமாக அவ்வபோது உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மே மாதம் நெஞ்சு பகுதியில் அசவுகரியம் மற்றும் சளித்தொற்று காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இந்தநிலையில் மீண்டும் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 18) சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியான புகைப்படத்தில், துரைமுருகன் தனது இடது கையில் ஸ்லிங் ( உடைந்த அல்லது இடப்பெயர்ச்சியடைந்த கை அல்லது தோள்பட்டை வார்ப்பில் அசையாமல் இருக்கப் பயன்படுகிறது) போட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினுடன் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் உடன் சென்று துரைமுருகனை நலம் விசாரித்துள்ளனர்.