தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கழுத்துக்கு கீழே உள்ள பகுதியில் ஏற்பட்ட பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், மாமல்லபுரத்தில் உள்ள, திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கால்டன் சமுத்திரா நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றிருந்தார்.
அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது டைனிங் டேபிளில் இருந்து அப்படியே சரிந்து கீழே விழுந்தார் துரைமுருகன். இதனையடுத்து உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவருக்கு கழுத்துக்கு கீழே உள்ள பகுதியில் ‘ஏர் கிராக்’ என்கிற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது 15 நாட்களில் சரியாகிவிடும் என்றும் அமைச்சர் துரைமுருகனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
