திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே 3) நடைபெற்றது. stalin announce dmk general council
இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
வரும் ஜூன் 1-ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளை திமுக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. stalin announce dmk general council