தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து அட்டூழியம்!

Published On:

| By Mathi

Tamil Nadu Fishermen

தமிழகத்தின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கடற்படையால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 114 மீனவர்கள் நடப்பாண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த அக்டோபர் 9-ந் தேதியன்று 47 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். நவம்பர் 3-ந் தேதியன்று நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும் என மொத்தம் 35 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நாகையை சேர்ந்த மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share