ADVERTISEMENT

தமிழ்நாடு முழுவதும் 3,665 காலி பணியிடங்களுக்காக காவலர் தேர்வு- 2.25 லட்சம் பேர் எழுதினர்

Published On:

| By Mathi

TN Police Exam

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) அறிவித்த 3,665 காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நவம்பர் 9- ந் தேதி மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இந்த 2-ம் நிலை காவலர் எழுத்துத் தேர்வை 2.25 லட்சம் விண்ணப்பதாரர்கள் எழுதினர்.

ADVERTISEMENT

2-ம் நிலைக் காவலர்கள், 2-ம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகிய பதவிகளுக்காக இந்த எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

இதில்

ADVERTISEMENT
  • 2-ம் நிலைக் காவலர்கள்- 2,833 பணி இடங்கள்
  • 2-ம் நிலை சிறைக் காவலர்கள் 180 பணி இடங்கள்
  • தீயணைப்பு வீரர்கள் 631 பணி இடங்கள்

இந்த காவலர் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறக் கூடாது என்பதற்காக இடது கை பெருவிரல் ரேகையைச் சரிபார்க்கும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இன்றைய எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து உடல் தகுதித் தேர்வு (PET/PMT), உடல் திறன் தேர்வு மற்றும் இறுதியாக சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடைபெறும்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share