பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்று வந்த காலாண்டு தேர்வுகள் இன்றுடன் (செப்டம்பர் 26) நிறைவடைகின்றன. அதை தொடர்ந்து வரும் அக்டோபர் 5ம் தேதி வரை 9 நாட்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் விதமாக சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.