ADVERTISEMENT

தங்கம் மட்டுமில்லை.. வெள்ளி விலையும் அதிரடி உயர்வு

Published On:

| By Pandeeswari Gurusamy

gold and silver rate on 26 september 25 in chennai

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் இன்று (செப்டம்பர் 26) கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.10,550க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு தங்கம் ரூ.320 உயர்ந்து ரூ.84,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வெள்ளி விலையில் பெரிய மாற்றம் இல்லாத நிலையில் இன்று (செப்டம்பர் 26) ஒரு கிராம் வெள்ளி அதிரடியாக ரூ.3 உயர்ந்து ரூ.153க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,53,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
நேற்றைய தங்கம் விலை

சென்னையில் நேற்று (செப்டம்பர் 25) ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் ரூ.90 குறைந்து ரூ.10,510க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.720 குறைந்து ரூ.84,080க்கு விற்பனையானது

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share