ADVERTISEMENT

பாராட்ட மனமில்லை… ஆளுநர் வழக்கில் அதிமுகவுக்கு செக் வைத்த சபாநாயகர்!

Published On:

| By vanangamudi

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 8) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைத்தது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் தெரிவித்துள்ளது. Speaker Appavu check mate

இந்த தீர்ப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஆளுநருக்கு எதிரான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இந்த தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி பிற மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. மாநில சுயாட்சி, மத்திய கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டிட தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த தீர்ப்புக்கு திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து பேசினர்.

ADVERTISEMENT

அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பார்த்து சபாநாயகர் அப்பாவு, “நீங்கள் இந்த தீர்ப்பை பாராட்ட மாட்டீர்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்ல மாட்டீர்கள்.

மீன்வளத்துறை பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டுவதற்கான மசோதாவும் அதில் உள்ளடங்கியுள்ளது. அதற்காகவாவது நீங்கள் பாராட்டலாமே” என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பார்த்து கேட்டார்.

ADVERTISEMENT

அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், வேலுமணி ஆகியோர் மிகவும் நெருடலாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இந்த சம்பவத்தால் அவையே சில நிமிடங்கள் நிசப்தமானது. Speaker Appavu check mate

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share