தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி தடுமாறி வருகிறது. south africa lead the wtc final aus struggled
லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் 3வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று (ஜூன் 11) மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரரான உஸ்மான கவாஜா 20 பந்துகளை சந்தித்தும் ஒரு ரன் கூட எடுக்காத நிலையில் ரபாடா பந்துவீட்டில் டக் அவுட் ஆனார். அதே ஓவரின் கடைசி பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து கேமரூன் க்ரினும் 4 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து மார்னஸ் லபுசனே (17) மற்றும் டிராவிஸ் ஹெட்டை (11) ஆகியோரை தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் மார்கோ ஜேன்சன் ஆட்டமிழக்கச் செய்தார்.
எனினும் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் – வெப்ஸ்டார் ஜோடி நிதானமாக ஆடியது. இதனால் தனது 42வது அரைசதத்தை பூர்த்தி செய்த நிலையில், ஸ்மித் 66 ரன்களில் மார்க்ரம் சுழலில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மற்றொரு முனையில் சிறப்பாக ஆடி வரும் வெப்ஸ்டர் தனது 2வது அரைசதத்தை பதிவு செய்து, அலெக்ஸ் கேரியுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளுக்கு 190 ரன்கள் குவித்து நிதானமாக விளையாடி வருகிறது.