டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசுத் துறைகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்யும் முகமையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல்பட்டு வருகிறது.
டிஎன்பிஎஸ்சி தலைவராக 2020ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். 2022ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து டிஎன்பிஎஸ்சிக்கு புதிய தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திர பாபுவை பரிந்துரைத்து தமிழக அரசு ஆளுநருக்கு கோப்பு அனுப்பிய நிலையில், அதை ஆளுநர் நிராகரித்துவிட்டார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக டிஎன்பிஎஸ்சி முறையான முழு நேர தலைவர் இல்லாமலேயே இயங்கி வந்தது.
இந்தசூழலில் புதிய தலைவரை தமிழக அரசு இன்று (ஆகஸ்ட் 13) நியமித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகளுக்கு அல்லது அவரது 62 வயது வரை டிஎன்பிஎஸ்சி தலைவராக இருப்பார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எஸ்.கே.பிரபாகர் 1989-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் 2019ல் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பதவி வகித்த எஸ்.கே.பிரபாகர் தற்போது வருவாய நிர்வாகத் துறை ஆணையராக கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தேசிய அளவில் ’ஐஐடி மெட்ராஸ்’ முதலிடத்தில் நீடிப்பது எப்படி?: இயக்குநர் காமகோடி விளக்கம்!
24,700 பேருக்கு வேலை: தமிழக அமைச்சரவை ஒப்புதல் தந்த மெகா திட்டங்கள்!