சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள பராசக்தி திரைப்படம் நன்றாக இருப்பதாக நடிகை ஷாலினி அஜித்குமார் பேட்டி அளித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் இன்று (ஜனவரி 10) வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பராசக்தி படத்தின் முதல் காட்சியை நடிகை ஷாலினி சத்யம் தியேட்டரில் பார்த்துள்ளார்.
படம் முடிந்து வெளியே வந்த அவரிடம் படம் எப்படி இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், “நான் மிகவும் ரசித்து பார்த்தேன். படம் ரொம்ப நல்லாருக்கு’ என்று பாசிட்டிவான பதிலை அளித்துள்ளார்.
பராசக்தி நாயகியான ஸ்ரீலீலாவும், நாயகன் சிவகார்த்திகேயனும் இதே தியேட்டரில் ரசிகர்களுடன் படத்தை பார்த்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியில், “எல்லா மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்பதற்காக எடுத்த படம் இது. ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எல்லா படமும் எடுக்கிறோம். இந்த படம் எனக்கு எப்படி சிறப்பு வாய்ந்ததோ, அதுபோன்றுதான் எல்லாரும் நினைப்பார்கள் என்று கருதுகிறேன்” என கூறினார்.
சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வெற்றி திரையரங்கில் படம் பார்த்தனர்.
