ADVERTISEMENT

திருமண தேதியை அறிவித்த சர்வானந்த் குடும்பத்தினர்!

Published On:

| By Jegadeesh

தெலுங்கு நடிகர் சர்வானந்த் நிச்சயதார்த்தம் முடிந்து, சில மாதங்கள் ஆன பிறகும் திருமண தேதி அறிவிக்கப்படாததால், இவருடைய திருமணம் நின்று போனதாக வதந்தி பரவியது.

இந்நிலையில், அவருடைய குடும்பத்தினர், சர்வானந்த் , ரக்ஷிதா ரெட்டி திருமண தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

நடிகர் சர்வானந்த் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கும் இவரின் காதலி ரக்ஷிதா ரெட்டி என்பவருக்கும், கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தத்தில், தெலுங்கு திரையுலகை சேர்ந்த ராம் சரண், ராணா, சிரஞ்சீவி, சித்தார்த், அதிதி ராவ், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்களும் அப்போது வைரலாகியது.

ADVERTISEMENT

இந்நிலையில், சர்வானந்த் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து, மூன்று மாதங்களுக்கு மேல் ஆன பிறகும், திருமணம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், சர்வானந்த் மற்றும் அவருடைய காதலி ரக்ஷிதா ரெட்டியின் திருமணம் நின்று விட்டதாக வதந்திகள் பரவியது.

இதற்க்கு சர்வானந்த் தரப்பில் , தற்போது சர்வானந்த், ஸ்ரீராம் ஆதித்யாவுடன் தனது வரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ஒரு மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டலின் இருந்த அவர் தற்போது தான் வந்துள்ளார்.எனவே கூடிய விரைவில், அவருடைய குடும்பத்தினர் திருமணம் தேதி குறித்து முடிவு செய்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும், இது போல் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து, தற்போது சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டியின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வந்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கர்நாடகா முதல்வர் அறிவிப்பு எப்போது? ரன்தீப் சுர்ஜேவாலா தகவல்!

கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share