ADVERTISEMENT

செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் நீதிமன்றத்தில் சரண்!

Published On:

| By Aara

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரும் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் தேடப்பட்டு வந்தவருமான கரூர் அசோக் குமார் இன்று (ஏப்ரல் 9) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். ashok kumar appeared sessions court

2023-ஆம் ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்கப்படுவதற்கு முன்பே, அவரது தம்பி அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ADVERTISEMENT

ஆனால், அவர் எந்த சம்மன்களுக்கும் ஆஜராகவில்லை. அதனால் அவரை தேடிக் கொண்டிருக்கிறோம் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

செந்தில் பாலாஜி சுமார் ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருந்துவிட்டு, கடந்த செப்டம்பர் 2024-இல் உச்சநீதிமன்றத்தால் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

ADVERTISEMENT

அதன் பிறகு கூட அசோக்குமார் பற்றிய எந்த தகவலும் இல்லை. இதற்கிடையில், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் பதவி ஏற்ற நிலையில், அவர் மீதான வழக்கு விசாரணையில் செல்வாக்கு செலுத்துவதாகவும் இதனால் அவருடைய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கு விசாரணை ஒரு பக்கம் நடைபெற்று வருகிற நிலையில். கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அசோக் குமார் உள்ளிட்ட 13 பேர் மீது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

ADVERTISEMENT

இதை ஆராய்ந்த முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏப்ரல் 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த மார்ச் 26-ஆம் தேதி அசோக் குமாருக்கு சம்மன் அனுப்பியது.

இந்தநிலையில், அசோக் குமார் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த ஒன்றே முக்கால் வருடங்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அசோக் குமார் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்திருப்பது இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ashok kumar appeared sessions-court

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share