சீனாவுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்காவில் இந்திய வம்சாசவளியைச் சேர்ந்த ஆஸ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஆஸ்லே டெல்லிஸ், மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் படித்தவர்; அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அரசியல் அறிவியல் படிப்பிலும் முதுகலை பட்டம் பெற்றார்.
தெற்காசிய அரசியல் தொடர்பான கொள்கை வகுப்பாளராக, ஆய்வாளராக செயல்பட்டு வந்த ஆஸ்லே டெல்லிஸ், 2001-ல் அமெரிக்கா அரசின் ஆலோசகராகவும் செயல்பட்டார்.
தற்போது சீனாவுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததாக ஆஸ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சீனா அரசின் அதிகாரிகளை டெல்லிஸ் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லிஸ் கைது செய்யப்பட்ட போது அமெரிக்கா அரசின் அதிமுக்கிய ரகசிய ஆவணங்கள் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.