திமுக கூட்டனியில் நன்னிலம் தொகுதியை ஏற்க மறுக்கும் எஸ்டிபிஐ?

Published On:

| By Mathi

DMK SDPI

திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு நன்னிலம் சட்டசபை தொகுதி (Nannilam Constituency) ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வேறு ஒரு தொகுதியை ஒதுக்க எஸ்டிபிஐ கேட்டு வருகிறது.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுக கூட்டணியில் இணைந்துள்ளது எஸ்டிபிஐ கட்சி. இந்த கட்சிக்கு 1 சட்டசபை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எஸ்டிபிஐ கட்சியினர் கடையநல்லூர், பாளையங்கோட்டை, பாபசாம் உள்ளிட்ட தொகுதிகளை திமுகவிடம் கேட்டிருந்தனர்.

ஆனால் எஸ்டிபிஐக்கு நன்னிலம் தொகுதியை ஒதுக்குவதாக திமுக கூறியிருந்தது.

ADVERTISEMENT

நன்னிலம் தொகுதி

தற்போது நன்னிலம் தொகுதிக்கு பதிலாக வேறு ஒரு தொகுதியை ஒதுக்குமாறு திமுக குழுவுடன் எஸ்டிபிஐ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share