டிஜிட்டல் திண்ணை: கார்கே கேட்ட 3 சீட்.. பிரேமலதாவின் ‘ராஜ்யசபா ராஜினாமா’ மிரட்டல்.. ஸ்டாலின் செம்ம ‘அப்செட்’!

Published On:

| By Mathi

Digital Thinnai Kharge Demands 3 Seats Stalin Deeply Upset

வைஃபை ஆன் செய்ததும், “உன் வண்ணம் இன்னும் மாறலையே கண்ணா” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. யாரை பத்தியா சொல்லப் போறீரு?

எல்லாம் தொகுதிகளை ஒதுக்குற பிரச்சனைதான்.. திமுக கூட்டணியில புதுச்சேரியில என்ன நடந்துச்சுன்னு நேத்து சொல்லி இருந்தோம் இல்லையா?

ADVERTISEMENT

ஆனா தமிழ்நாட்டுல இப்ப திமுககிட்ட ரொம்பவே பம்முது காங்கிரஸ்.. புதுச்சேரியில, “நாம செஞ்சமாதிரி தமிழ்நாட்டுல திமுகவும் நம்ம 28 தொகுதிகளில்ல வேட்பு மனுத் தாக்கல் செஞ்சு நாம சொன்ன மாதிரியே ”பிரண்ட்லி பைட்டிங்”னு சொன்னா என்னா ஆகும் நிலைமைன்னு?”ன்னு ரொம்பவே யோசிக்குதாம்யா..

அதனால தொகுதி ஒதுக்கீடு பிரச்சனையில இந்த டைம் ஸ்டாலினிடம், ‘எந்த முகத்தை வைத்து கொண்டு பேசுவதுன்னு’ சங்கடப்பட்டு கார்கேவை பேச சொன்னாராம் ராகுல் காந்தி..

ADVERTISEMENT

இதை பத்தி ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “ஆமா சார்.. காங்கிரஸ் விருப்பப் பட்டியல்ல இருக்கிறதுல 3 தொகுதிகளை கண்டிப்பாக காங்கிரஸுக்கு கொடுக்கனும்னு கார்கே (Kharge) பேசினாரு..

அதுல வேளச்சேரி தொகுதியும் ஒன்னு.. இந்த தொகுதியில போன டைமே திமுக போட்டியிடறதா இருந்துச்சு.. அப்ப ராகுல் காந்தி பேசித்தான் ஹாரூன் பையன் அசன் மவுலானாவுக்கு வாங்கி கொடுத்தாரு..

ADVERTISEMENT

வேளச்சேரியில அசன் மவுலானா ஜெயிச்சாலும் தொகுதி பக்கமே போகலைங்கிறது தொடங்கி ஏகப்பட்ட அதிருப்தி.. இந்த டைம் காங்கிரஸ் நின்னாலும் ஜெயிக்க முடியாதுன்னு ரிப்போர்ட் சொல்லுது..

அதனால காங்கிரஸுக்கு வேளச்சேரியை ஸ்டாலின் (Stalin) ஒதுக்கலை.. திமுகவுல துணை மேயர் சைதை மகேஸ்குமாருக்கு வேளச்சேரியை கொடுக்கலாம்னு முடிவு செஞ்சிருந்தாரு ஸ்டாலின்..

ஆனா இந்த டைம் ராகுல் காந்திக்கு பதிலா கார்கே, ஸ்டாலின் கிட்ட பேசினாரு.. வேளச்சேரி (Velachery) உட்பட மொத்தம் 3 தொகுதிகளை எங்களுக்கு கொடுத்தே ஆகனும்னு கார்கே ரொம்பவே கேட்டுகிட்டாரு..” என்றனர்..

திமுக (DMK) கூட்டணியில தேமுதிக ‘சவுண்டு’ அதிகமா இருக்குது போல?

ஓஹோ.. உமக்கே கேட்டுச்சுன்னா எந்த அளவுக்கு தேமுதிக ‘சவுண்டு’ விட்டிருக்கும்..

தேமுதிகவுக்கு 10 சீட் கொடுத்ததையே கூட்டணி கட்சிகளால ஜீரணிக்க முடியாமதான் இருக்காங்க.. தேமுதிகவுக்கு 10 சீட் கிடைச்சதே ஜாக்பாட்தான்னு நாம விரிவாகவே சொல்லி இருந்தோம்..

இப்ப தேமுதிக, விருப்ப பட்டியல்னு 25 தொகுதிகள் லிஸ்ட்ட முதல்ல கொடுத்தது.. அப்புறமா, இந்த 10 தொகுதிகளை கொடுத்தே ஆகனும்னு ‘சப் லிஸ்ட்’ட்டும் கொடுத்திருக்காம்..

இந்த ‘சப் லிஸ்ட்டை’ பார்த்துட்டு திமுக பேச்சுவார்த்தை குழு தலைவர் டிஆர் பாலு செம்ம கோபமாகிட்டாராம்…

இதை பத்தி திமுகவில விசாரிச்சப்ப, “தேமுதிக கேட்கிறது எல்லாமே திமுகவின் முக்கியமான தொகுதிகள்.. விக்கிரவாண்டி இடைத் தேர்தல்ல அன்னியூர் சிவா ஜெயிச்சாரு.. இடைத்தேர்தல்ல ஜெயிச்சாலும் தொகுதிக்கான ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து கொண்டு வந்து தொகுதியை நல்லா வெச்சிருக்காரு.. இப்ப தேமுதிக அந்த தொகுதியை எங்களுக்கு கொடுங்கன்னு கேட்டு அடம் பிடிக்குது..

அதே மாதிரி சென்னையில விருகம்பாக்கம் தொகுதியை கொடுத்தே ஆகனும்னு பிரேமலதா (Premalatha Vijayakanth) கேட்கிறாங்களாம்..

விருகம்பாக்கம் தொகுதியில 2011-ல் அதிமுக கூட்டணி வெச்சிருந்தப்ப தேமுதிக 71,524 ஓட்டு வாங்குச்சு.. ஆனா 2016-ல் 9,730; 2021-ல் வெறும் 1,585 ஓட்டுதான் தேமுதிக வாங்க முடிஞ்சது.. ஆனா பிரேமலதா, ‘நாங்க ஜெயிச்ச தொகுதி.. எங்களுக்கு கொடுங்கன்னு’ ஓவர் பில்டப் கொடுக்கிறாங்களாம்..

அதனால , “என்னது ஜெயிச்ச தொகுதியா? போன டைம் 1,500 ஓட்டுதான் வாங்குனாங்க.. அவங்களுக்கு விருகம்பாக்கம் கொடுக்கனுமா?”ன்னு கடுப்படிச்சுவிட்டுட்டாரு டிஆர் பாலு.

தொகுதிகளை ஒதுக்குறது தொடர்பா பேசும் போது, “நீங்க ராஜ்யசபா சீட்டும் வாங்கி இருக்கீங்க.. தொகுதிகள் விஷயத்துல இவ்வளவு பிடிவாதமா இருக்காதீங்க”ன்னு பிரேமலதாகிட்ட திமுக தரப்புல சொன்னப்ப, “என்னய்யா பெரிய ராஜ்யசபா (Rajya Sabha) சீட்.. எங்களுக்கு அந்த சீட்டே வேணாம்.. உடனே ராஜினாமா செஞ்சுடுறோம்..”னு கோபப்பட்டாங்களாம்..

பிரேமலதா இப்படி ‘மிரட்டுற’ தொனியில பேசுறதை திமுகவுல யாராலுமே சகிக்க முடியலை..இந்த தகவல் ஒவ்வொன்னும் ஸ்டாலினுக்கு போனதால அவரு செம்ம அப்செட்ல இருக்கிறாரு”ன்னு சொல்றாங்கய்யா என்றபடியே டைப் செய்துவிட்டு ஆப் சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share