திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் விவரங்கள் இன்று (மார்ச் 28) வெளியிடப்பட்டது.
அதில், எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு நன்னிலம் (உதயசூரியன்) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியினர் கடையநல்லூர், பாளையங்கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட தொகுதிகளை திமுகவிடம் கேட்ட நிலையில், நன்னிலம் தான் ஒதுக்கப்படும் என்று திமுக உறுதியாக கூறிவந்தது. இதுபற்றி நமது மின்னம்பலத்தில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதியை ஏற்க மறுக்கும் எஸ்டிபிஐ? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதுபோன்று தமிழ் தேசம் கட்சிக்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி ஒதுக்கப்படுகிறது என்று கூறியிருந்தோம். நத்தம் விஸ்வநாதனை எதிர்த்து ஸ்டாலின் களமிறக்கும் ‘முத்தரையர்’ சங்கம் செல்வக்குமார் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படியே நத்தம் (உதயசூரியன்) தொகுதி தமிழ் தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
