கங்குலி, டிராவிட், கோலி என ஆகியோர் இடம்பெற்ற அரிய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சன் இணைந்தார். sai sudharsan join hands with ganguly dravid kohli
இந்திய அணியின் ஜாம்பவான்களில் முன்னாள் இந்திய கேப்டன்கள் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி ஆகியோர் முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர்.
இவர்கள் மூவருக்கும் ஒரு மறக்கமுடியாத ஒற்றுமை உள்ளது என்பது கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத ஆச்சரியம் தான்.
அதாவது, கங்குலி (vs ENG, 1996), டிராவிட் (vs ENG, 1996), கோலி (vs WI, 2011) ஆகியோர் மூவரும் வெவ்வேறு ஆண்டுகளில் இதே ஜூன் 20ஆம் தேதி இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகினர்.
இந்த வரிசையில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 23 வயதான சாய் சுதர்சனும் அதே ஜூன் 20ஆம் தேதி இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.
இதனால் கங்குலி, டிராவிட் கோலி ஆகிய ஜாம்பவான்களின் வரிசையில் சாய் சுதர்சனும் இணைந்தார். இன்று லீட்ஸில் துவங்கிய இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கினார். அவர் அறிமுக போட்டியில் பெரிய ஸ்கோரை குவிப்பார் என ரசிகர்கள் எதிர்பாத்தனர். ஆனால் 4 பந்துகளை சந்தித்த அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.
எனினும் துவக்க வீரர் ஜெய்ஸ்வாலுடன் மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த சுப்மன் கில் பொறுப்புடன் பொறுமையாக ஆடிவருகின்றார்.
தற்போது வரை 45 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்துள்ளது. களத்தில் ஜெய்ஸ்வால் (80*) மற்றும் சுப்மன் கில் (55*) இருவரும் அரைசதம் கடந்த நிலையில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.