இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2020ஆம் ஆண்டுக்குள் 200 கோடி டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சரக்கு விமானப் போக்குவரத்துச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதால், இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 2020ஆம் ஆண்டுக்குள் 200 கோடி டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 13ஆம் தேதியன்று டெல்லியில் எஃப்ஐசிசிஐ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ஷாகிதா முகமது கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 900 மில்லியன் டாலராகும். சரக்கு விமானப் போக்குவரத்துத் தொடங்கப்பட்டுள்ளதால், 2020ஆம் ஆண்டுக்குள் 200 கோடி டாலர் மதிப்பை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்று கூறினார்.
இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே, டெல்லியிலிருந்து காபுலுக்கும், மும்பையிலிருந்து காபுலுக்கும் இடையே இரண்டு சரக்கு விமானப் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லிக்கும் காபுலுக்கும் இடையே சரக்கு விமானச் சேவை 2017 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. மும்பைக்கும் காபுலுக்கும் இடையே சரக்கு விமானச் சேவை 2017 டிசம்பரில் தொடங்கப்பட்டது. இதற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே 2,500 மெட்ரிக் டன்னுக்கும் மேலான சரக்குகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் அதிபருக்கான பொருளாதார ஆலோசகரான அஷ்ரப் கனி பேசுகையில், “இந்தியாவை வேளாண் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான மிகப்பெரும் சந்தையாக ஆப்கானிஸ்தான் கருதுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவுக்கு 10,200 மெட்ரிக் டன் அளவிலான சரக்குகளை காபுல் ஏற்றுமதி செய்துள்ளது” என்று கூறினார்.









