“ரயில்வே எக்ஸாம் எப்போ வரும்? நோட்டிபிகேஷன் வருமா, வராதா?” என்று தெரியாமல், இருட்டில் துளாவிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு ஒரு ஜாக்பாட் செய்தி.
இனிமேல் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போல ரயில்வே தேர்வுகளுக்கும் ஆண்டுத் திட்டம் (Annual Calendar) வந்தாச்சு! ரயில்வே தேர்வு வாரியம் (RRB) வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, எந்தெந்த மாதங்களில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும் என்ற ‘கிளியர் கட்’ அப்டேட் இதோ.
எந்த மாசம்? என்ன எக்ஸாம்?
ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள உத்தேச அட்டவணைப்படி (Tentative Schedule), வருடத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து தேர்வுகள் நடத்தப்பட உள்ளன:
ஜனவரி – மார்ச்:
- ALP (Assistant Loco Pilot): ரயில் ஓட்டுநர் ஆக ஆசைப்படுபவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்திலேயே வாய்ப்பு. இதற்கான அறிவிப்பு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் வரும்.
ஏப்ரல் – ஜூன்:
- டெக்னீஷியன் (Technicians): ஐடிஐ (ITI) முடித்தவர்களுக்கான டெக்னீஷியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு இந்த மாதங்களில் வெளியாகும்.
ஜூலை – செப்டம்பர்:
- NTPC (Non-Technical Popular Categories): டிகிரி மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கான ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் போன்ற பதவிகள்.
- ஜூனியர் இன்ஜினியர் (JE): இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான ஜே.இ (Junior Engineer) மற்றும் பாராமெடிக்கல் (Paramedical) பணியிடங்களுக்கான அறிவிப்பு இந்த சமயத்தில் வரும்.
அக்டோபர் – டிசம்பர்:
- லெவல்-1 (Group D): பல்லாயிரக்கணக்கான காலியிடங்களைக் கொண்ட குரூப்-டி மற்றும் மினிஸ்டீரியல் பதவிகளுக்கான அறிவிப்பு ஆண்டின் இறுதியில் வெளியாகும்.
இனிமே நோட்டிபிகேஷன் வரட்டும்னு வெயிட் பண்ணாதீங்க.. இப்பவே படிக்க ஆரம்பிங்க!
- ஒரே கல்லில் பல மாங்காய்: ரயில்வே தேர்வுகளைப் பொறுத்தவரை சிலபஸ் கிட்டத்தட்ட ஒன்றுதான் (Maths, Reasoning, GK). நீங்கள் ALP-க்குத் தயாரானால், அப்படியே டெக்னீஷியன் மற்றும் குரூப்-டி தேர்வையும் எழுதிவிடலாம்.
- JE-க்கு ஸ்பெஷல் கவனம்: இன்ஜினியரிங் மாணவர்கள் ஜூலை மாதம் வரை காத்திருக்காமல், இப்போதே டெக்னிக்கல் பாடங்களைப் (Core Subjects) படிக்கத் தொடங்குங்கள்.
- பிசிக்கல் ஃபிட்னஸ்: ALP மற்றும் குரூப்-டி வேலைகளுக்கு கண் பார்வை மற்றும் உடல் தகுதி மிக முக்கியம். படிக்கும்போதே உடற்பயிற்சியும் அவசியம்.
இது ஒரு உத்தேச அட்டவணைதான். ஆனால், ரயில்வே வாரியம் இனி இதை முறையாகப் பின்பற்றும் என்று உறுதியளித்துள்ளது. 2026-ல் ரயில்வே வேலை நிச்சயம்!
