ஐடிஐ (ITI) முடித்தவர்களுக்கு ஜாக்பாட்! கப்பல் கட்டும் தளத்தில் 210 மத்திய அரசு வேலைகள்… சம்பளம் 41 ஆயிரம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

cochin shipyard recruitment 2026 iti workmen vacancies apply online

“ஐடிஐ முடிச்சிட்டு சும்மா இருக்கோமே… கைநிறைய சம்பளத்தோட ஒரு நிரந்தர கவர்மெண்ட் வேலை கிடைக்காதா?” என்று ஏங்கும் இளைஞர்களுக்கு இதோ ஒரு சூப்பர் செய்தி.

கேரளாவில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் (Cochin Shipyard Limited) நிரந்தரப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. “கப்பல் வேலைனா சும்மாவா?” சம்பளம், கெத்து எல்லாமே வேற லெவல்!

ADVERTISEMENT

என்ன வேலை? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? ‘வொர்க்மேன்’ (Workmen) எனப்படும் பணியிடங்களுக்கு மொத்தம் 210 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பதவிகள்:

ADVERTISEMENT
  • வெல்டர் கம் ஃபிட்டர் (Welder cum Fitter) – 152 இடங்கள் (அதிகம்!).
  • ஃபிட்டர் (Electrical/Electronics) – 25 இடங்கள்.
  • பெயிண்டர் – 9 இடங்கள்.
  • கிரேன் ஆபரேட்டர் – 7 இடங்கள்.
  • மெஷினிஸ்ட் – 6 இடங்கள்.

இதுபோக ஷிப்ரைட் வுட் (Shipwright Wood), இன்ஸ்ட்ருமென்டேஷன் மெக்கானிக் போன்ற பதவிகளும் உண்டு.

கல்வித் தகுதி:

ADVERTISEMENT
  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட பிரிவில் ITI (National Trade Certificate) முடித்திருக்க வேண்டும்.
  • அனுபவம் முக்கியம்: குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் (Experience) அவசியம்.

வயது வரம்பு: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் (ஜனவரி 23, 2026 தேதியின்படி). அதாவது 1991க்கு முன் பிறந்திருக்கக் கூடாது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தளர்வு உண்டு.

சம்பளம் சும்மா தாறுமாறு! வேலையில் சேர்ந்தவுடன் மாதம் சுமார் ரூ.41,795 சம்பளமாகக் கிடைக்கும்.

  • அடிப்படை ஊதியம்: ரூ.22,500 – ரூ.73,750 வரை.
  • இதுபோக அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி எல்லாம் சேர்த்தால் சம்பளம் கைநிறையக் கிடைக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?

  • ஆன்லைன் மட்டும்: www.cochinshipyard.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூ.750. (எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் இல்லை).
  • கடைசி தேதி: வரும் ஜனவரி 23, 2026 வரை காலக்கெடு உள்ளது.

தேர்வு முறை:

  • கட்டம் 1: ஆன்லைன் தேர்வு (30 மதிப்பெண்கள்) – பொது அறிவு, ரீசனிங் மற்றும் சப்ஜெக்ட் கேள்விகள்.
  • கட்டம் 2: செய்முறைத் தேர்வு (Practical Test) – 70 மதிப்பெண்கள். இதில் உங்கள் வேலைத்திறனைச் சோதிப்பார்கள்.

கேரளா பக்கம் வேலைனு யோசிக்காதீங்க… இது சென்ட்ரல் கவர்மெண்ட் வேலை!

  • ஸ்கில் டெஸ்ட் தான் கிங்: எழுத்துத் தேர்வை விட, பிராக்டிகல் டெஸ்ட்டுக்குத் தான் 70% முக்கியத்துவம். அதனால், வெல்டிங், ஃபிட்டிங் வேலைகளை ஒருமுறை நன்கு செய்து பார்த்துவிட்டுப் போவது நல்லது.
  • எக்ஸ்பீரியன்ஸ் சர்டிஃபிகேட்: 5 வருட அனுபவம் கேட்டிருப்பதால், உங்கள் பழைய பணிச் சான்றிதழ்களைச் சரியாக எடுத்து வையுங்கள். அதுதான் இந்த வேலையின் ‘நுழைவுச்சீட்டு’.
  • போட்டி குறைவு: அனுபவம் கேட்டிருப்பதால் ஃப்ரெஷர்ஸ் வரமாட்டார்கள். அதனால் போட்டி கொஞ்சம் குறைவாகவே இருக்கும். தைரியமாக அப்ளை பண்ணுங்க!

கடைசி தேதி ஜனவரி 23. இன்றே அப்ளை பண்ணிடுங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share