தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ சோதனை… ஏன்?

Published On:

| By Kavi

NIA Raid in Tamilnadu

தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 30) காலை முதல் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து ஆட்கள் சேர்ப்பதாக தேசிய புலனாய்வு முகமைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த அடிப்படையில், இன்று காலை முதல் தமிழ்நாட்டில் 12 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆட்கள் சேர்ப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் சென்னை, கும்பகோணம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் உள்ள அப்துல் கான் என்பவரின் வீட்டிற்கு சென்ற என்.ஐ.ஏ அதிகாரிகள் ஏதேனும் ஆவணங்கள், பயங்கரவாத செயல்களுக்கு தொடர்புடைய விஷயங்கள் உள்ளதா என சோதனை செய்து வருகின்றனர்.

ஈரோடு பகுதியில் ஜேசிஸ் ஸ்கூல் அருகில் ஷர்புதீன் என்பவர் வீட்டில் கொச்சி என்.ஐ.ஏ ஆய்வாளர் விஜி  தலைமையிலும், சென்னையில் முகமது இஷாக் என்பவர் வீட்டில் சென்னை என்.ஐ.ஏ ஆய்வாளர் அமுதா தலைமையிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இன்னும் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டுள்ளதா என்ற விவரங்கள் தெரிய வரவில்லை.

சோதனையின் முடிவில் இது குறித்த தகவல்கள் வெளியாகும் என்று என்.ஐ.ஏ தரப்பில் கூறப்படுகிறது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

T20 World Cup 2024: ஓய்வை அறிவித்த விராட், ரோகித்

45 நாட்களுக்கு மின்சார உற்பத்தி நிறுத்தம்: மின் பற்றாக்குறை ஏற்படுமா?

வேலைவாய்ப்பு : இந்தியன் வங்கியில் பணி!

ஹெல்த் டிப்ஸ்: பகலில் உறங்கலாமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share