மீண்டும் வெளியாகும் கமலின் ஆளவந்தான்

By Kavi

|

Published on 2 Sep 2022, 12:56 PM

கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படங்களில் ஆளவந்தான் படமும் ஒன்று. 2001ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ரவீனா டண்டன், மனீஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். கமல்ஹாசன் திரைக்கதை என்பதால் ஆளவந்தான் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது.

ADVERTISEMENT

கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியான அந்தப்படம் எல்லோரது எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கி பெரும் தோல்வியைச் சந்தித்தது.

கலைப்புலி எஸ்.தாணு திரைப்பட தயாரிப்பில் மிகப்பெரும் நஷ்டத்தை அவருக்கு ஏற்படுத்திய படம் ஆளவந்தான்.

ADVERTISEMENT

இதனால் ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான் என்று அவர் பத்திரிகைகளுக்குக் கொடுத்த பேட்டி பரபரப்பானது.

கமல்ஹாசன் – தாணு இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு இன்று வரை இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லை.

ADVERTISEMENT

ஆளவந்தான் வெளியான நேரத்தில், இது இன்னும் பத்துவருடம் கழித்து வெளியாகவேண்டிய படம், கமல்ஹாசன் எதை எடுத்தாலும் அட்வான்சாக சிந்தித்திருக்கிறார் என்கிற விமர்சனம் எழுந்தது.

அப்போது அந்தப்படம் மூன்று மணிநேரம் ஓடக்கூடிய படமாக இருந்தது. 21 ஆண்டுகள் கழித்து இப்போது அந்தப்படத்தை மீண்டும் வெளியிடத் தயாராகியிருக்கிறார் கலைப்புலி எஸ். தாணு.

ஒரு மணிநேரப் படத்தைக் குறைத்து இரண்டுமணி நேரம் ஓடுகிற வகையில் படத்தொகுப்பு செய்து 3டி தொழில்நுட்பத்தில் வெளியிடவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

சினிமா ரசனைகள் மாறியிருக்கிறது, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஆளவந்தான் படத்தை வெளியிட்டால் படம் கண்டிப்பாக வரவேற்பைப் பெறும் என்று உறுதியாக நம்பி படத்தைப் பெரிய அளவில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறாராம் கலைப்புலி எஸ்.தாணு.

ஆனால் இவை எதுவும் கமல்ஹாசனுக்குத் தெரியாது அல்லது முறைப்படி தாணு தரப்பில் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இராமானுஜம்

விக்ரம் பட வசூல் உண்மையில் சாதனைதானா?

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel