சென்னையில் அதிகாலை முதல் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை தொடரும் என்று தானியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். Rain will continue in Chennai
வங்கக் கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும் 21ஆம் தேதி அரபிக் கடலில் புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
இந்தநிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
சென்னையை பொறுத்தவரை இன்று (மே 19) அதிகாலை முதல் விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம், கோடம்பாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம், மதுரவாயல். கிண்டி, பழவந்தங்கல், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், வேளச்சேரி, பம்மல், ஆவடி உட்பட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இந்தசூழலில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னையில் மழை பெய்யும். இதையடுத்து மழை தீவிரமடைந்து மீண்டும் தொடர்ந்து மழை பெய்யும். வட தமிழகம் முழுவதும் மழைக்காலத்தில் இருப்பதைப்போல கனமழை இருக்கும். மே மாதத்தில் கடல் பகுதியில் இருந்து மேகங்கள் நகரும் ஒரு அரிதான நிகழ்வு நடைபெறுகிறது” என்று தெரிவித்துள்ளார். Rain will continue in Chennai