நீலகிரி முதல் திருநெல்வேலி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Rain weather tamilnadu
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பல இடங்களில் கொட்டித் தீர்க்கிறது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது.
மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் வடதமிழகத்தில் மொத்தம் 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள 11 மாவட்டங்கள்:
- நீலகிரி
- கோவை
- திருப்பூர்
- திண்டுக்கல்
- தேனி
- தென்காசி
- திருநெல்வேலி
- சென்னை
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு