திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: ராகுல்காந்தி வேதனை!

Published On:

| By christopher

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

திருப்பதில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமான லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மாடு, பன்றிகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார்.

இதுதொடர்பாக இன்று (செப்டம்பர் 20) செய்தியாளர்களை சந்தித்த திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ், திருப்பதி லட்டு தயாரிக்க சேர்க்கப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியது உண்மை தான் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த செய்தியால் உலகம் முழுவதும் உள்ள திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது. மேலும் ஆந்திரா மட்டுமின்றி தேசிய அரசியலிலும் லட்டு கலப்படம் முக்கிய விவாதப் பொருளாக தற்போது மாறியுள்ளது.

இந்த நிலையில் திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தற்போது வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் கவலையளிக்கின்றன.

இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டிற்குரிய தெய்வமாக திருப்பதி பாலாஜி இருக்கிறார். இந்த கலப்பட விவகாரம் ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும்.

எனவே இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள அதிகாரிகள் நமது மதத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும்” என ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஜாமீன் மனு தள்ளுபடி… மகாவிஷ்ணு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

நாயுடு Vs ஜெகன்மோகன்: அரசியல் குண்டாக மாறிய திருப்பதி லட்டு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share