ராகுல் டிராவிட் மகனுக்கு U19 அணியில் இடம்… சாதிப்பாரா?

Published On:

| By Kumaresan M

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்ட அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 4 நாட்கள் நடக்கும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. செப்டம்பர் 21 முதல் 26 வரை 3 ஒருநாள் போட்டிகள் புதுச்சேரி மைதானத்திலும், செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 10 வரை 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய யு19 அணிக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகமது அமான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  துணைக் கேப்டனாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ருத்ர படேல் செயல்பட போகிறார்.

இந்திய அணிக்கு கர்நாடகா மாநிலத்தில் இருந்து மட்டும் 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சமித் டிராவிட், கார்த்திகேயா, சமர்த் மற்றும் ஹர்திக் ராஜ் ஆகிய 4 பேரும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில்  சமித் டிராவிட் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் முன்னாள் பயிற்சியாளருமான  ராகுல் டிராவிட்டின் மகன் ஆவார்.

விஜய் மெர்ச்சண்ட் டிராபி மற்றும் என்சிஏ பயிற்சி முகாமில்  கலந்து கொண்ட வீரர்களின் ஆட்டத்தை வைத்து இந்திய அணி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. சமித் டிராவிட் டி20 போட்டிகளிலும் விளையாடி வருகிறார். தந்தை போலவே நல்ல ஷார்ட்களை ஆடுவது சமித்தின் பிளஸ் பாயிண்ட் ஆகும்.

சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூனும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். ஆனால், அவரால் தந்தையை போல சோபிக்க முடியாமல் போனது என்பதும் கவனத்தில் கொள்ள தக்கது. அதே போலவே,  சமீத் டிராவிட்டுக்கும் சவால் காத்திருக்கிறது என்பதே உண்மை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ரேஷனில் வாங்காத ஆகஸ்ட் மாத பொருட்கள் செப்டம்பரில் கிடைக்குமா?: தமிழக அரசு பதில்!

கண்ணுக்கே தெரியாத பாக்டீரியா… கரு கலைந்தது, கால்களும் போனது… இந்தியாவின் முதல் பிளேடு ரன்னரின் வெற்றிக்கதை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share