இந்தியாவின் முதல் பிளேட் ரன்னர் ஒரு பெண் என்பது பலரும் அறியாதது. அவரின் பெயர் ஷாலினி சரஸ்வதி . பெங்களுருவை சேர்ந்தவர். கடந்த 2012 ஆம் ஆண்டு ஷாலினி கர்ப்பிணியாக இருந்த போது ஒருவித பாக்டீரியா தாக்கியுள்ளது. இந்த நோய் தாக்குதல் காரணமாக, மாதக்கணக்கில் மருத்துவமனை படுக்கையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கருவும் கலைந்து போனது, தனது கை மற்றும் கால்களையும் இழந்திருக்கிறார். ஆனால், ஷாலினி சோர்ந்துவிடவில்லை.
தொடர்ந்து, ஃபிட்னஸ் மற்றும் உடல்நிலையை பராமரிக்க கால்களில் பிளேடுகளை பொருத்தி கொண்டு, நடக்க தொடங்கியுள்ளார். மீண்டும் நடக்க வேண்டும் என்பதுதான் அவரின் அடுத்த ஆசையாக இருந்தது. இந்த சமயத்தில் பிபி ஐயப்பா என்ற பயிற்சியாளரும் அவருக்கு ஆதரவாக இருந்துள்ளார். தொடர்ந்து, பெங்களுரு காண்டீவரா மைதானத்தில்தான் பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.
நாளடைவில் ஆர்வம் பெருகி முதலில் மாரத்தான் போட்டியில் பங்கேற்க தொடங்கியுள்ளர். பின்னர், தேசிய போட்டிகளில் கலந்து தங்கம், வெள்ளி பதக்கங்களை அள்ளினார். தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஹாங்சுவில் நடந்த ஆசிய பாராஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற போதுதான் ஷாலினியை அனைவரும் திரும்பி பார்த்தனர். இதற்கு 9 ஆண்டு காலம் ஷாலினி உழைத்துள்ளார்.
தற்போது 41 வயதாகும் ஷாலினி கூறுகையில், தற்போது இந்தியாவில் பாரா வீரர்கள் சரியான பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளனர். ஏராளமான பாரா வீரர்கள் போட்டியில் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர். கால்கள், கைகள் போனது பற்றி யோசிக்காமல், முடங்கிக் கிடக்காமல் விளையாட்டுகளில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளது நல்ல விஷயமாகவே பார்க்கிறேன். ஆனால், இன்னும் கிராமங்களில் பாரா வீரர்களுக்கான உபகரணங்கள் கிடைக்காததுதான் ஒரு குறையாக பார்க்கிறேன் என்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: முழு விவரம்!
கேரவனில் ரகசிய கேமரா… ராதிகா கிளப்பிய பகீர்… இவ்வளவு நாள் மௌனமாக இருந்தது ஏன்? எழும் கேள்வி