பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
சரக்கு விற்பனை மற்றும் சேவை வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது என தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த செப்டம்பர் 3ம் தேதி 56 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு அடுக்குகளிலிருந்தது. 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாகக் குறைக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் தற்போது 375 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி பூஜ்ஜியம் ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தம் நாளை வரும் 22ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 20) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார் என ஏஎன்ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நானை ஜிஎஸ்டி வரிக்குறைப்பு அமலுக்கு வருவதால் இது குறித்து பிரதமர் மோடி தனது கருத்துகளை வெளிப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.