குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று அக்டோபர் 21 முதல் 24 வரை கேரளாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
அக்டோபர் 21-ந் தேதி மாலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திருவனந்தபுரம் சென்றடைவார்.
அக்டோபர் 22-ந் தேதி, சபரிமலை கோயிலில் குடியரசுத் தலைவர் தரிசனம் செய்வார்.
அக்டோபர் 23-ந் தேதி, திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனில் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனின் மார்பளவு சிலையை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பார். பின்னர், வர்க்கலாவில் உள்ள சிவகிரி மடத்தில் ஸ்ரீ நாராயண குருவின் மகாசமாதி நூற்றாண்டு விழாவை அவர் தொடங்கி வைப்பார். பாளை, செயின்ட் தாமஸ் கல்லூரியின் வைரவிழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவிலும் அவர் கலந்து கொள்வார்.
அக்டோபர் 24 ஆம் தேதி, எர்ணாகுளம் புனித தெரசா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்வார்.
சபரிமலை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
திருவனந்தபுரத்தில் இருந்து நாளை நிலக்கல் செல்லும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அங்கிருந்து பம்பை சென்று இருமுடி கட்டி சிறப்பு வாகனத்தில் சபரிமலை சன்னிதானத்துக்கு அழைத்து செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்கிறார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் வருகையால் சபரிமலையில் இன்றும் நாளையும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
