கடந்த சில மாதங்களாக தங்கம், வெள்ளியை விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், தீபாவளி திருநாளான இன்று (அக்டோபர் 20) சரிவை சந்தித்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று காலையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 80 குறைந்து ரூ.11,920க்கும், ஒரு சவரனுக்கு ரூபாய் 640 குறைந்து, ரூ.95,360க்கும் விற்பனையாகி வருகிறது.
அதே போன்று 24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 87 குறைந்து ரூ.13,004க்கும், ஒரு சவரனுக்கு ரூபாய் 676 குறைந்து, ரூ.1,04,032க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையானது இன்று விலை மாற்றமின்றி ரூ.190க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,90,000க்கும் விற்பனையாகி வருகிறது.
