பிரதீப் ரங்கநாதன் பட பெயர் மாற்றம்!

Published On:

| By Kavi

பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் பட பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாள் இன்று (ஜூலை 25).

அதனை முன்னிட்டு செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார், இயக்குநர் விக்னேஷ் சிவன்,பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) என பெயரிடப்பட்டு, அதன் தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா, சீமான், கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். இன்றைய இளம் இணைய தலைமுறையினரின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்திருக்கிறது.

Image

இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டங்கள் முடிந்துள்ள நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் வித்தியாசமான வகையில் நாயகன் பிரதீப் ரங்கநாதனின் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருப்பதால்… இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘நானும் ரவுடிதான்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் – ‘லவ் டுடே’ படத்தின் மூலம் பிரமாண்ட வெற்றியை பெற்று தமிழ் நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் – ‘மாஸ்டர்’, ‘ லியோ’ போன்ற பிரம்மாண்டமான படைப்புகளை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம்- ஆகியோரின் கூட்டணியில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் தயாராகி இருப்பதால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

ஏற்கனவே இந்தப் படத்திற்கு LIC என பெயர் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெயரை பயன்படுத்த LIC பொது துறை நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் LIK என தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

தமிழகம், மேற்கு வங்கத்தை தொடர்ந்து கர்நாடகா… நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்!

’அந்தகன்’ பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் : தியாகராஜன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share