சென்னை திரு.வி.க.நகர் சட்டசபை தொகுதியில் அண்ணா திமுக கூட்டணியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கான ‘பி’ பார்ம், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வழங்கப்பட்டது.
திரு.வி.க.நகர் தொகுதியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுகிறார் என நமது மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இத்தொகுதியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கை எதிர்த்து திமுக வேட்பாளராக சென்னை மேயர் பிரியா போட்டியிடுகிறார் எனவும் நாம் குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை பசுமைவழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு அழைத்து வந்தார். அங்கு, திரு.வி.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கான எடப்பாடி பழனிசாமியின் கையெழுத்திட்ட ‘ பி’ பார்ம், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிடம் வழங்கப்பட்டது.
