சென்னை டூ கோவை வந்தே பாரத் ரயில்: பிரதமர் துவக்கி வைத்தார்!

Published On:

| By Selvam

சென்னை கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.

பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தனி விமானம் மூலம் மதியம் 2.45 மணிக்கு சென்னை வந்தார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.

ADVERTISEMENT

மதியம் 3.15 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்திற்கு வந்தார். அங்கிருந்து கார் மூலமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தார். அங்கு சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து ராமகிருஷ்ணா மடத்தின் 125-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.

மாலை 6.30 மணியளவில் பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் ரூ.3,700 கோடி மதிப்பீட்டில் தாம்பரம் – செங்கோட்டை ரயில் சேவை, திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதை உள்ளிட்ட திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

ADVERTISEMENT

பின்னர் இரவு 7.15 மணியளவில் தனி விமானம் மூலம் மைசூரு செல்கிறார்.

தசரா இயக்குநருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு!

புதிய விமான முனையத்தை திறந்து வைத்தார் மோடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share