தசரா இயக்குநருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு!

Published On:

| By Kavi

அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதலா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் கடந்த வாரத்தில் வெளியான திரைப்படம் தசரா.

இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷூம், நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி ஆறு நாட்களில் உலகளவில் 100 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தது.

இதனை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி படக்குழுவினர் அனைவருக்கும் 10 கிராம் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கியுள்ளார். இப்படத்தின் இயக்குனருக்கு BMW காரை பரிசாக அளித்துள்ளார். 

இராமானுஜம்

பிரதமர் வருகை: காங்கிரஸ் கட்சியினர் ஹவுஸ் அரஸ்ட்!

மோடி சென்னை வருகை: அண்ணாமலை எங்கே?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel