டிடி தொலைக்காட்சியில் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஒளிபரப்ப கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு மே 5-ஆம் தேதி வெளியான திரைப்படம் கேரளா ஸ்டோரி.
கேரளாவை சேர்ந்த இளம் பெண்களை கட்டாய மதமாற்றம் செய்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ததாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.
இதனால் கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இப்படத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், டிடி தொலைக்காட்சியில் கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று புரோமோ வெளியானது.
இதுகுறித்து பினராயி விஜயன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “பிரிவினைவாதத்தை தூண்டும் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை டிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரச்சார இயந்திரமாக தேசிய செய்தி ஒளிபரப்பாளர்கள் மாறக்கூடாது.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், வகுப்புவாத பிரச்சனைகளை ஏற்படுத்தி பதட்டங்களை அதிகரிக்க செய்யும் இதுபோன்ற திரைப்படங்களை ஒளிபரப்பக்கூடாது. வெறுப்பை விதைக்கும் இத்தகைய திரைப்படங்களை கேரளா எப்போதும் உறுதியாக எதிர்க்கும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காஷ்மீரில் பிடிபட்ட சிறுத்தை: விமர்சனத்துக்கு ஆளாகும் வைரல் வீடியோ!
ஹாலிடே ஸ்பெஷல்: எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்!