பறந்து போ – விமர்சனம்! – சிரிக்க வைக்கிறதா இயக்குனர் ராமின் படைப்பு?

Published On:

| By uthay Padagalingam

Paranthu Po Tamil Movie Review 2025

கற்றது தமிழ் தொடங்கி தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என்று தனது ஒவ்வொரு படத்திலும் ‘சீரியசான’ கதை சொல்லலைக் கடைப்பிடித்தவர் இயக்குனர் ராம். அதற்கு நேரெதிராக, திரையிலும் மேடை நிகழ்வுகளிலும் சீரியசான விஷயங்களைக் கூட ‘காமெடி’ ஆக்கிவிடுபவர் நடிகர் சிவா. இவர்கள் இருவரும் ஒரு படத்தில் ஒன்றிணைகின்றனர் எனும்போது, அது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது. Paranthu Po Tamil Movie Review 2025

அதனை எந்த வகையில் கடந்து சென்றிருக்கிறது ‘பறந்து போ’? இந்த கேள்வியோடு தியேட்டரில் அப்படத்தைக் காணச் செல்கின்றனர் ரசிகர்கள்.

கடந்த 4ஆம் தேதியன்று இப்படம் தியேட்டர்களில் வெளியானது. இதில் சிவா உடன் கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்கீஸ், மிதுல் ரெயான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறதா? மிக முக்கியமாக, ட்ரெய்லரில் காட்டியவாறு நம்மைச் சிரிக்க வைக்கிறதா?

சாதாரணர்களின் கதை இது..!

அரையாண்டு விடுமுறையில் பள்ளி செல்லாமல் இருக்கும் மகனை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வேலைக்குச் செல்கிறார் தந்தை. ஒரு கண்காட்சியில் சேலை வியாபாரம் செய்யும் கடையைத் திறந்திருக்கிறார் தாய். இருவரது அருகாமையும் கிடைக்காமல் தவிக்கிற அந்த மகனோ, வெளியுலகில் இஷ்டம்போலத் திரிய வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும் என்றெண்ணுகிறார். Paranthu Po Tamil Movie Review 2025

Paranthu Po Tamil Movie Review 2025

அந்த மகன் ஏங்குவது போல ஒரு வாய்ப்பு அமைகிறது. நீண்ட நாட்கள் கழித்து தந்தையுடன் ஒன்றாக பைக்கில் பயணிக்கிறார். Paranthu Po Tamil Movie Review 2025

அப்பா வழி தாத்தா, பாட்டி தொடங்கிப் பல மனிதர்களைச் சந்திக்கிறார் அந்தச் சிறுவன். அது அவரது வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கூடவே அந்த தந்தை, தாய் வாழ்வைக் காண்கிற பாங்கையும் மாற்றுகிறது. அது எப்படி என்று சொல்கிறது ‘பறந்து போ’ திரைக்கதை. Paranthu Po Tamil Movie Review 2025

உண்மையைச் சொன்னால், இதில் வரும் எந்தக் கதாபாத்திரமும் ‘அசகாய சூரர்கள்’ இல்லை. மிகச்சாதாரணர்களாக இருக்கும் அவர்களில் சிலர் பெற்றோராகவும் சிலர் பிள்ளைகளாகவும் இருக்கின்றனர். இரு வேறு உலகங்களில் இவர்கள் பிரிந்து நிற்கின்றனர். அந்த உலகங்கள் எந்த புள்ளியில் ஒன்று சேர்கின்றன என்று சொல்கிறது இக்கதை. Paranthu Po Tamil Movie Review 2025

மிகச்சில பெற்றோர் மட்டும் தங்களது குழந்தைகளை அவர்களது இயல்பில் இருக்க அனுமதிக்கின்றனர். அப்படி நாமும் அனுமதித்திருக்கிறோமா அல்லது தற்போது அதனைச் செயல்படுத்துகிறோமா அல்லது எதிர்காலத்தில் அப்படியொரு வாழ்க்கை முறையைத் தேர்வு செய்வோமா என்று கேள்வி எழுப்பிய வகையில் கவனம் பெறுகிறது ‘பறந்து போ’.

‘வித்தியாசமான’ சிவா! Paranthu P o Tamil Movie Review 2025

மேற்சொன்ன கதையில் அந்த தந்தையாக சிவாவும் தாயாக கிரேஸ் ஆண்டனியும் அவர்களது மகனாக மிதுல் ரெயானும் நடித்திருக்கின்றனர்.

சென்னை 600028, தமிழ் படம் தொடங்கி இதற்கு முன் தான் நடித்த படங்களில் சிவா எப்படி வந்து போனாரோ, அதே போன்று தன்னியல்புடன் இப்படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.

ஆனால், அந்த படங்களில் கேமிரா எங்கிருக்கிறது என்று தெரிந்திருப்பது போலவே அவரது நடிப்பு அமைந்திருக்கும். இந்த படத்தில் அந்த திசை எங்கிருக்கிறது என்று துளியளவு கூட எண்ணாதது போல ‘பெர்பார்ம்’ செய்திருக்கிறார். அதுவே, நமக்கு ‘வித்தியாசமான’ சிவாவைத் திரையில் காட்டுகிறது. உண்மையில், அவரது திரை வாழ்வைத் தடம் புரட்டுகிற படமாக இது அமைந்திருக்கிறது. Paranthu Po Tamil Movie Review 2025

Paranthu Po Tamil Movie Review 2025

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்திருக்கிறார் கிரேஸ் ஆண்டனி. அவர் நடித்த படங்களைத் தேடிப் பிடித்து பார்க்கிற வகையில் இதில் அவரது நடிப்பு அமைந்துள்ளது.

சிறுவன் மிதுல் ரெயான் திரையில் நம்மையும் குழந்தையும் உணரச் செய்கிறார். இப்படிப்பட்ட நடிப்பைப் பார்த்து வெகு நாட்களாகிறது. அதுவே அவரது இருப்பின் சிறப்பு.

இவர்கள் மூவர் தவிர்த்து, இப்படத்தில் சுமார் ஒன்றரை டஜன் பேராவது தலைகாட்டியிருப்பார்கள்.

அவர்களில் நாயகனின் பெற்றோராக வருகிற பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜா ரவி, நாயகனின் தோழியாக வருகிற அஞ்சலி, அவரது கணவராக வருகிற அஜு வர்கீஸ், அவர்களது மகனாக நடித்த சிறுவன், மிதுலின் தோழியாக வரும் ஜெஸ்ஸி குக்கு, அவரது பெற்றோராக நடித்துள்ள விஜய் ஜேசுதாஸ், தியா, கிரேஸ் ஆண்டனியுடன் பணிப்பெண் மைனாவாக வருபவர், அவரது காதலர் குருவியாக நடித்தவர் மற்றும் ஒரு சில ஷாட்களில் வந்து போகிற முதியவர், ஆட்டோகாரர், டீக்கடைக்காரர் என்று சிறு பாத்திரங்களில் நடித்தவர்கள் கூட நம் மனதில் பதிகிற அளவுக்கு நடிப்பைத் தந்திருக்கின்றனர்.

’சீலைக்காரம்மா, எண்ணூறு ரூபாய்க்கு இந்த சீலையைக் கொடுத்தா கட்டுப்படி ஆகுமா’ என்கிற மூதாட்டியும் இதில் அடக்கம். Paranthu Po Tamil Movie Review 2025

பயணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதையில் இது போன்ற பாத்திர வார்ப்பே பெரும்பலம். அதனைச் சரியாகச் செய்திருக்கிறார் இயக்குனர் ராம்.

படத்தில் எங்குமே இருண்மை தெரியாமல், அதனை ரசிகர்கள் உணரவிடாமல் பங்களித்திருக்கிறது என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு.

அமைதியாகவும் மென்மையாகவும் நகர்கிற திரைக்கதை திடீரென்று படுவேகம் எடுக்கும்போதும் சரி, மீண்டும் நிதானம் நோக்கி நகரும்போதும் சரி, மதி வி.எஸ்ஸின் படத்தொகுப்பு திரையில் சீர்மையைப் பேணியிருப்பது ஆச்சர்யம்.

இன்னும் குமார் கங்கப்பனின் தயாரிப்பு வடிவமைப்பு, ஸ்டண்ட் சில்வாவின் ஆக்‌ஷன் கொரியோகிராஃபி, எம்.ஆர்.ராஜாகிருஷ்ணனின் ஆடியோகிராஃபி, சந்திரகாந்த் சோனேவானேவின் ஆடை வடிவமைப்பு, இயல்பான மனிதர்களைக் காட்ட உதவியிருக்கிற சசிகுமார் பரமசிவம் மற்றும் சுதி சுரேந்திரனின் ஒப்பனை உட்படப் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் ராமின் கதை சொல்லலுக்கு உதவியிருக்கின்றன.

Paranthu Po Tamil Movie Review 2025

படம் முழுக்க ஒரு ‘கூல் டோன்’ நீடிக்க வழி வகை செய்திருக்கிறது டிஐ. பாப்கார்ன் சிதறும் காட்சி உட்படச் சில இடங்களில் ஸ்டண்ட் கொரியோகிராபி மற்றும் விஎஃப்எக்ஸ் அசர வைக்கிறது. Paranthu Po Tamil Movie Review 2025

நிறைய காட்சிகளில் குறும்பாடல்கள் வந்து போகின்றன. காட்சியின் தன்மையை எளிதாகச் சொல்வதோடு, இப்படைப்பை ‘மியூசிகல் காமெடி மெலோட்ராமா’ ஆக்கவும் அவை வழி வகுத்திருக்கின்றன.

அதன் பின்னிருப்பது பாடலாசிரியர் மதன் கார்க்கி மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இணை. இருவரது பங்களிப்பையும் ‘அசத்தல்’ என்று பாராட்டுவது மிகச்சாதாரணம். Paranthu Po Tamil Movie Review 2025

மிகச்சில இடங்களில், நம்மை உணர்வெழுச்சிக்கு ஆளாக்குகிறது யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை. அக்காட்சிகள் முடிந்தபிறகே, நமக்கு அந்த உண்மை பிடிபடுவது அவரது நிபுணத்துவத்திற்கான சான்று.

இப்படி ‘பறந்து போ’வில் பலரும் தங்களது ‘பெஸ்ட்’டை தந்திருக்கின்றனர். பல படிகள் அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்திருக்கின்றனர். அது இயக்குனர் ராமுக்கும் பொருந்தும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

தொடக்கத்தில் சென்னையில் நிகழ்வதாகச் சில காட்சிகள் வருகின்றன. அவற்றில் நம்பகத்தன்மை குறைவு. காரணம், சென்னை என்று உணர வைக்கிற வெம்மையோ, சூழலமைப்போ தெளிவாகக் காட்டப்படவில்லை. அது மட்டுமே இப்படத்தில் சட்டென்று தென்படுகிற குறை.

மற்றபடி, ஒரே நேரத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற ஒரு கதையைத் திரையில் பார்க்கத் தயார் என்பவர்களை ‘பறந்து போ’ நிறையவே திருப்திப்படுத்தும்.

இயக்குனர் ராமின் திரைப்பயணத்தை முழுமையாக ‘யுடர்ன்’ இடச் செய்கிற ஒரு படைப்பாகவும் இது அமையலாம். எதிர்காலத்தில் அப்படியொரு முடிவை நோக்கி அவர் நகர்ந்தால், ‘பறந்து போ’ போன்ற மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான திரையனுபவத்தைச் சீரான இடைவெளியில் அவரிடம் இருந்து ரசிகர்கள் பெறக்கூடும்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share