ADVERTISEMENT

இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை!

Published On:

| By Kavi

Pakistan bans Indian aircraft trade

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் பாகிஸ்தான் துண்டித்துள்ளது. Pakistan bans Indian aircraft trade

அதன்படி இந்தியா விமானங்களுக்கான வான்வழியை பாகிஸ்தான் மூடியுள்ளது. 

ADVERTISEMENT

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியிருக்கும் நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பதில் நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது. 

இன்று (ஏப்ரல் 24) பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முக்கிய அமைச்சர்கள் மற்றும் முப்படைத் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்திய சிறிது நேரத்திலேயே இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. இந்தியாவுடனான அனைத்து வர்த்தகமும் நிறுத்தப்படுவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் வழியாக மற்ற நாடுகளுக்கும் இந்தியா வணிகம் மேற்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளது.

ADVERTISEMENT

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Pakistan bans Indian aircraft trade

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share