பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். pahalgam terror attack
காஷ்மீர் மாநிலம் பஹல்கம் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உலக தலைவர்களும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், “காஷ்மீரில் இருந்து வரும் செய்தி ஆழ்ந்த கவலையை அளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும் ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் எண்ணங்கள் எல்லாம் இந்திய மக்களுடன் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறுகையில், “காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியுடன் பேசவுள்ளார். நட்பு நாடான இந்தியாவுக்கு எங்கள் ஆதரவு உண்டு” என்று தெரிவித்துள்ளார். pahalgam terror attack