பஞ்சாபில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் அடுத்த மூன்று நாட்களுக்கு மூட அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. order to close all educational institution in punjab
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வெடித்துள்ளதை தொடர்ந்து எல்லையோர மாநிலங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பஞ்சாபில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் அடுத்த மூன்று நாட்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்குமான விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோன்று அனைத்து அரசு அதிகாரிகளுக்குமான விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன
கல்வி நிலையங்கள் மூடப்படுவதால் பஞ்சாப் பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பொது மக்களின் வசதிக்காக கட்டுப்பாட்டு அறைகளையும் பஞ்சாப் அரசு அமைத்துள்ளது. order to close all educational institution in punjab