தவெகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

Published On:

| By Kavi

அதிமுக ஆட்சிக் காலத்தில் எம்.எல்.ஏ.வாக இருந்தவரும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளருமான ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஜே.சி.டி. பிரபாகர். பின்னர் அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட பிறகு அவருடன் சென்றார்.

ADVERTISEMENT

தீவிர ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த அவர், இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

இதுதொடர்பாக ஊடகங்களிடம் பேசிய ஜேசிடி பிரபாகர், “நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கையில் விஜய்யின் தவெகவில் இணைந்துள்ளேன். எம்ஜிஆரைச் சந்தித்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி, விஜய்யைச் சந்தித்தபோதும் ஏற்பட்டது. அதிமுகவை ஒருங்கிணைக்க தான் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை . தொண்டர்கள் விரக்தியடைந்துள்ளனர்” என்று கூறினார்.

ADVERTISEMENT

முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்து, செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share