தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வெளியேறினார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தார்.
இந்தநிலையில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று (ஜூலை 31) சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள விடுதியில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் என்.டி.ஏ கூட்டணியில் இருக்கலாமா? வெளியேறலாமா என்பது தொடர்பாக ஆலோசனை செய்தார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த உறவு முறிக்கப்பட்டுள்ளது. ஏன் கூட்டணி உறவை முறித்துக்கொண்டோம் என்பது நாடே அறிந்தது. பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பதையும் நாடறியும்.
எதிர்காலத்தில் நிலைமைக்கு ஏற்ப கூட்டணியை முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.