முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா!

Published On:

| By Mathi

Premalathaa meets MK Stalin

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

முதல்வர் ஸ்டாலின் அண்மையில் தலைசுற்றல் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதல்வர் ஸ்டாலின் சில நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் இன்று முதல் வழக்கமான அரசு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் இன்று ஜூலை 31-ந் தேதி சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். இச்சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி தெரிவித்த ஸ்டாலின்

ADVERTISEMENT

இச்சந்திப்பு தொடர்பாக, “நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி” என தமது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share