போடியில் ஓபிஎஸ் போட்டி : அதிமுக வேட்பாளர் யார்?

Published On:

| By Kavi

திமுக சார்பில் போடி தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் களமிறங்குகிறார். இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 28) அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 27, 2026 அன்று திமுகவில் இணைந்தார்.

ADVERTISEMENT

திமுக தலைவர் வாய்ப்பளித்தால் போடி தொகுதியில் போட்டியிடுவேன் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி வந்தார். அதோடு திமுகவுக்கு ஆதரவாக தொடர்ந்து கூட்டமும் நடத்தி வந்தார். இந்தசூழலில் தேர்தலில் போட்டியிட அவருக்கு முதல்வர் வாய்ப்பளித்துள்ளார்.

போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.டி.நாராயணசாமியை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி களமிறக்கியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share