ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 27 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், இன்று (மார்ச் 30) 2 பேர் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றனர்.
அதனைத்தொடர்ந்து போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னம் இறுதி செய்யப்பட்டது.
அதன்படி பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது.
அவருடன் ஒ பன்னீர்செல்வம் என்ற பெயரில் போட்டியிடும் மற்ற 5 சுயேட்சை வேட்பாளர்களுக்கு வாளி, பட்டாணி, கண்ணாடி டம்ளர், திராட்சை ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் பட்சத்தில் தனக்கு வாளி சின்னம் வழங்கும் படி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதே நேரத்தில் ஒ. பன்னீர் செல்வம் என்ற பெயரில் போட்டியிடும் மற்றொரு சுயேட்சை வேட்பாளரும் வாளி சின்னம் ஒதுக்கும்படி கோரியிருந்தார்.
எனவே தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் குலுக்கல் போடப்பட்டதில் வெற்றி பெற்ற மற்றொரு சுயேட்சை பன்னீர் செல்வத்திற்கு வாளி சின்னம் ஒதுக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கும் ’பலாப்பழம்’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்
கிறிஸ்டோபர் ஜெமா
மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம்!
”அப்போது டிடிவி வீட்டு காவல் நாயாக இருந்தோம். ஆனால்” : ஆர்.பி. உதயகுமார் ஆவேசம்!